ஆஸ்திரேலியா : விக்டோரிய மாநிலத்தை சூறையாடிய வெள்ளம்..! தத்தளிக்கும் மக்கள்..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட  இரண்டாவது மாநிலமான விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், புறநகர்ப் பகுதிகளில் உள்ள தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இதுமட்டுமில்லாமல், 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மேலும் 500 வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு அவற்றில் அவசரகால சேவைகள் துண்டிக்கப்பட்டன. 

இந்தக் கனமழையால் சுமார் 120 சாலைகள் மூடப்பட்டுள்ளது என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், டாஸ்மானியா பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடுவதற்கும், மீட்பு பணியிலும் பல ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மிதவை படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் வெள்ள நீர் வருவதற்கு முன்பு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் மணல் மூட்டைகளை கொண்டு மூடுவதற்கு ராணுவம் உதவியது. 

விக்டோரியா மாநிலத்திற்கு இது ஒரு மிகப்பெரிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டதால், 1,000 பேர் தங்கும் வசதி கொண்ட கொரோனா தனிமைப்படுத்தல் மையம் ஒன்று மக்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், ஆஸ்திரேலியா நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்சிலும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

austreliya country viktoriya state heavy rain and floods


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->