அதிகாலையில் குலுங்கிய அந்தமான்! சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிர்வு.!
Andaman near earthquake
அந்தமான் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 54 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் சுற்றுவட்டார பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறித்தும் எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.