ட்ரம்பின் கொள்கைகள் முற்றிலும் நிராகரிப்பு.. முதல் நாளிலேயே அதிபர் ஜோ பைடன் அதிரடி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற நிலையில், வெள்ளை மாளிகையில் தனது அலுவலக பணிகளை தொடங்கினார். அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கொள்கை முடிவுகளை மாற்றியுள்ளார். 

கொரோனா நெருக்கடி, குடியேற்றம் மற்றும் இனவாத பிரச்சனைகள் தொடர்பாக 15 முக்கிய உத்தரவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்தடுப்பு விவகாரத்தில், அமெரிக்கா அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவு முதல் உத்தரவாக கையெழுத்தானது. 

இதனைத்தொடர்ந்து அமெரிக்கா - மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுமான நிறுத்தம், அமெரிக்கா - கனடா இடையேயான எரிவாயு இணைப்பு திட்டம் இரத்து, பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது குறித்தும் கையெழுத்திட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American President Joe Biden Decline Donald Trump Govt Resolution


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->