பொதுமுடக்கத்தால் பல லட்சம் அமெரிக்கர்கள் வீடுகளை இழக்கும் அபாயம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பல லட்சம் மக்கள் வீடற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வருகிறது கொரோனா. உயிரிழப்புகளை தாண்டி பல்வேறு பொருளாதர சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. பல உலக நாடுகள் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் பல லட்சம் மக்கள் வீடற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடியுள்ளது. பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசாங்கம் கடும் கட்டுபாடுகளை விதித்தது. 

இந்த நிலையில், அமெரிக்காவில் பல லட்சம் மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பொதுமுடக்கம் காரணமாக அவர்களின் வருவாய் பெரிதும் பாதிக்கபட்டதால் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர்.  வாடகை செலுத்தாதவர்களை வீட்டு உரிமையாளர்கள் வீட்டில் இருந்து வெளியேற்ற 11 மாதங்களுக்கு தடை விதிக்கபட்டுருந்தது. 

அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க அரசு பல பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த தொகையை பயன்படுத்த அந்த நாட்டு சுப்ரீம்கோர்ட் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பல லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது.

இந்த தடை உத்தரவை ஒரு மாதம் நீட்டிக்க கோரி ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் நாடளுமன்றத்தில் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அதை குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஏற்றுகொள்ளாத்தால் தடையை நீடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில், ஜனநாயக கட்சி உறுப்பினர் கோரி புஷ் விடிய விடிய போரட்டம் நடத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Rental House Living Lakhs Persons May be Getting out form Home due to Rental Paying issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->