பெண் அரசு பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நியூயார்க் கவர்னர்.. விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


நியூயார்க் கவர்னர் பெண் அரசு பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்ய அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ (Andrew Cuomo) அவரின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் லேடிடியா ஜேம்ஸ் (Letitia James) தலைமையில் விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 

இந்த விசாரணையின் முடிவு அறிக்கைகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அட்டர்னி ஜெனரல் லேடிடியா, " நியூயார்க் கணவர் ஆண்ட்ரூ கியூமோ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை. பல காலகட்டங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். 

மாநில மற்றும் கூட்டாட்சி சட்டத்தினை மீறி அவர் செயல்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் எங்களுக்கு பல அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் முதல் முன்னாள் ஊழியர்கள் என பலரிடம் விசாரணை செய்யப்பட்டதில், அவரின் மீதான பாலியல் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டது " என்று தெரிவித்தார். 

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து அட்டர்னி ஜெனரல் லேடிடியா ஜேம்ஸ் தலைமையிலான விசாரணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆண்ட்ரூ கியூமோ தாமாக முன்வந்து பதவி விலகிக்கொள்ள அறிவுறுத்தினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America New York Governor Sexual Torture to Woman Employees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->