காணாமல் போன காதல் ஜோடி பிணமாக மீட்பு..! கொலையா? தற்கொலையா? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா சான் ஆண்டோனியா நகரைச் சேர்ந்தவர் சவானா நிக்கோல் சோடோ (வயது 18). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இசைக்கலைஞரான மேத்யூகுரேரா (வயது 22) என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனி வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். 

அடிக்கடி தனது தாயுடன் சபானா தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதற்கிடையே சவானா நிறைமாத கர்ப்பிணியான உடன் இந்த மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தேதி குறித்திருந்தனர். 

இந்நிலையில் சவானா தனது காதலனுடன் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்று பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. 

இதனால் பதறிப்போன பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான காதல் ஜோடியை தேடி வந்தனர். 

இந்நிலையில் புறநகர் பகுதியில் உள்ள சாலையில் கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக நின்று கொண்டிருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை சோதனை செய்த போது காருக்குள் இரண்டு அழுகிய நிலையில் சடலங்கள் கிடப்பது கண்டறியப்பட்டது. 

இது குறித்த விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் சவானா மற்றும் அவரது காதலன் என்பது தெரிய வந்தது. உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால் இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனை அடுத்து 2 உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான காதல் ஜோடி இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Missing love couple recovered deadbody 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->