சக இந்தியரை மிக மோசமாக அவமதித்த அமெரிக்க இந்தியர்.! வீடியோவை கண்டு.. கொந்தளிகள் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


சக இந்தியரை அமெரிக்க இந்தியர் ஒருவர் மிக மோசமாக திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

இதை கண்ட நெட்டிசன்கள் கொந்தளித்து கடுமையாக அவரை சாடி வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் டாக்கோ பெல் ஹோட்டலில் ஜெயராமன் என்ற இந்தியர் சைவ உணவு ஆர்டர் செய்திருக்கிறார். இதை கண்ட இந்திய அமெரிக்கரான டிஜெந்தர் சிங் என்பவர், ஜெயராமனை பார்த்து,  "நீ சைவப் பிராணி. 

மாட்டு கறி சாப்பிட மாட்டாய். தயவு செஞ்சு இங்கிருந்து சென்று விடு." என்று மிக மோசமாக அவரை திட்டுகிறார். அத்துடன் ஜெயராமன் என்ற அந்த நபரை பார்த்து, "நீ கேவலமான இருக்கிறாய். நீ ஒரு அருவருத்தக்க நாய். நீ இந்தியாவுக்கே சென்று விடு. 

இது ஒன்றும் இந்தியா இல்லை. இனிமேல் நீ வெளியில் வராதே." என்று திட்டியதோடு மட்டுமல்லாமல் அவரை காரி துப்புகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, டிஜேந்திர சிங்கிற்க்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America indian scolding Indian


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->