கொரோனாவை தொடர்ந்து, அமெரிக்காவை புரட்டி எடுத்த புயல்.. அரங்கேறிய சோகங்கள்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் ஏற்கனவே கொரானா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது டெக்சாஸ் மாகாணத்தை சக்தி வாய்ந்த புயலான ஹண்ணா தாக்கியுள்ளது. இந்த புயலானது அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது. தெற்கு டெக்சாசின் தீவுகளில் நேற்று முன்தினம் ஹன்னா என்ற புயல் தாக்கியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று சுழன்று அடிக்கிறது. 

இதன் காரணமாக வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கின்றன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுகின்றன. புயலைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

மழை, புயல், வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. புயல் குறித்து டெக்சாஸ் மாகாணத்தில் 32 பகுதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புயலை எதிர்கொள்ள கொரோனா தடையாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஹண்ணா புயலால் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்டிருக்கும் சேத விபரங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Hanna Storm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->