அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா... பிரான்ஸ், யூ.கேவிலும் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் கரோனா வைரஸ் என்ற நோய்த்தொற்றின் தாக்கமானது அதிகளவு வெளிப்பட்டுள்ளது. சீன நாட்டில் இருந்து பரவ துவங்கிய கரோனா வைரஸானது பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக இறந்து வருகின்றனர். 

உலகம் முழுவதும் சுமார் 204 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பல நாடுகள் கூட கரோனாவின் தாக்கத்தில் சிக்கி பெரும் இன்னல்களையும், இழப்பையும் சந்தித்து வருகிறது. கரோனா வைரஸின் தாக்கத்தால் உலகம் முழுவதும் 1,346,566 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 74,697 பேர் பலியாகியுள்ளனர். 278,695 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 

அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா வைரஸானது கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் 367,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரேநாளில் 30,331 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. சுமார் 1,255 பேர் நேற்று உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,871 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் 136,675 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 700 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 13,341 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலி நாட்டில் 132,547 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 636 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 16,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் 98,010 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று 833 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 8,911 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஐக்கிய நாடுகளில் 51,608 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று 439 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 5,373 ஆக உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America France Italy Spain UK corona virus death update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->