போலி அடையாளத்துடன் அமெரிக்காவில் உளவு பார்த்த பெண்மணி.. தட்டி தூக்கிய எப்.பி.ஐ..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் மக்கள் விடுதலை இராணுவத்தில் பணியாற்றி வரும் பலரும், தங்களின் உண்மையான தகவலினை மறைத்து, ஆராய்ச்சி மாணவர்கள் என்ற பெயரில் அமெரிக்காவில் வந்து உளவு பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்கள் மற்றும் தரவுகளை திருடுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றசாட்டு வைத்து இருந்தது. 

மேலும், அமெரிக்காவில் உள்ள 25 நகரங்களில் சீன உளவுத்துறை இயங்குதளம் செயல்பட்டு வருவதாகவும், இதற்கு சீன தூதரகம் தலைமையகமாக செயல்பட்டு வந்ததாகவும் புகார் கூறப்பட்டு வந்தது.அமெரிக்க அதிபர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஆகியோர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர். 

இந்த நிலையில், அங்குள்ள ஹஸ்டன் நகரில் இருந்த அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்ட நிலையில், டெக்சாஸில் இருக்கும் தூதரகத்தையும் மூடக்கூறி வலியுறுத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, அங்குள்ள செங்கிடூ அமெரிக்க தூதரகத்தை மூடியது.

இந்த தருணத்தில், சீனாவில் உள்ள இராணுவத்தை சார்ந்த பெண் விஞ்ஞானி ஜீவன் டாங் என்பவர், மாணவி என்று அடையாளப்படுத்தி விசாவுக்கு விண்ணப்பம் செய்து இருப்பதையும், இவர் சீன இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார் என்பதையும் எப்.பி.ஐ கண்டறிந்துள்ளது. 

இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸ்கோ நகரின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த பெண்மணியை எப்.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக தூக்கியுள்ளனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மொத்தமாக நான்கு பேர்களை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருக்கும் நபரையும் தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் சீன பல்கலை. ஆராய்ச்சித்துறையினர் பணியாற்றும் நபர்கள் என்பதும் அதிர்ச்சிதரும் வகையில் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America FBI Arrest china girl involve spy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->