டென்னிஸ் பந்தை எடுக்க, வித்தியாசமான முறையை கையாண்ட நாய்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


டென்னிஸ் பந்தை இரண்டு நாய்கள் நீச்சல் குளத்தில் இருந்து எடுக்க போராடிய காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் (Scottsdale) பகுதியை சார்ந்த குடும்பத்தினர் டென்னிஸ் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். தங்களின் வீட்டில் உள்ள நீச்சல் குளத்திற்கு அருகே இவர்கள் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

இதன்போது, இவர்களின் டென்னிஸ் பந்து எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்திற்குள் விழுந்துள்ளது. இதனையடுத்து, இவர்களின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு நாய்கள், டென்னிஸ் பந்தை நீரில் இருந்து எடுக்க போட்டி போட்டு செய்யப்பட்டது. 

நீச்சல் குளத்தின் ஓரத்தில் அமர்ந்து தனது கால்களால் தண்ணீரை லேசாக அதன் பக்கம் இழுத்து பந்தை எடுக்க முயற்சித்தது. ஆனால், அது பலனளிக்கவில்லை. ஒரு நாய் பந்தை எடுக்கும் முயற்சியில் அங்கும் இங்கும் சென்ற நிலையில், உடலை நீச்சல் குளத்திற்கு உள்ளே கொண்டு சென்றது. 

இதன்போது, சமநிலையை தவறவிட்ட நாய் அப்படியே நீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்த நாய் முழுசா நனைந்த பின்னர் எதற்கு முக்காடு? என்பதை போல, பந்தை கவ்விக்கொண்டு நீச்சலடித்து வெளியே வந்தது. இந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Arizona Dog Takes Tennis ball at Swimming poll 20 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->