அமெரிக்கா - தலிபான் பேச்சுவார்த்தையில் டிரம்ப் நம்பிக்கை.. அதிரடியாக வெளியான புதிய தகவல்..!!  - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 19 வருடமாக ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கு இடையே உளநாட்டு போரானது நடைபெற்று வருகிறது. இந்த போர் துவங்கியதில் இருந்தே ஆப்கான் படைகளுக்கு அமெரிக்க இராணுவம் பக்கத்துணையாக இருந்து வருகிறது. 

இந்த போர் முடிவில்லாது நடந்து வரும் நிலையில், இதனை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான் பயங்கரவாத இயக்கத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. 

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர் பலியாகினார். இதனால் ஆத்திரத்துக்கு உள்ளான டிரம்ப் பேச்சுவார்த்தையை இரத்து செய்து அறிவிக்கவே, அமெரிக்கா மற்றும் தலிபான் மோதல் மீண்டும் வலுத்தது. 

இந்த சமயத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்க்கு நவம்பர் மாதம் பயணம் செய்த டிரம்ப், தலிபான் இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்குவதாக அறிவித்ததை அடுத்து, இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏறப்டுள்ளதாகவும், முதற்கட்டமாக இரண்டுநாள் சண்டை நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இரண்டு நாட்களுக்குள் கையெழுத்தாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கத்தார் நாட்டின் தலைநகரான தேகாவில் தலிபான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் போரை முடிவிற்கு கொண்டு வர வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான ஒப்பந்தம் இரண்டு வாரத்திற்குள் கையெழுத்தாகும் என்றும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ameircan president speech about daliban peace


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->