#Breaking: ஆப்கானிஸ்தானில் அமைந்தது தலிபான் அரசு... அதிபர், துணை அதிபர், அமைச்சர்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து தன்னால் இயன்ற அளவு ஆப்கானிய மக்களை தனது நாட்டிற்கு அழைத்து சென்றது. மேலும், அந்தந்த நாடுகள் சார்பாக தங்களின் நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஆப்கானியர்களும் மீட்கப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதும், பிற நாடுகள் தற்போது ஆப்கானுடன் தொடரும் உறவை தொடரலாம் என்றும், ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து பிற பயங்கரவாத இயக்கம் செயல்பட தலிபான்கள் அனுமதி வழங்காது என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், பல விரும்பத்தகாத நிகழ்வுகள் இன்று வரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராக யார் தேர்வு செய்யப்படுவார்? என ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், புதிய தலைவராக முகமது ஹசன் அகுந்த் சதா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக அப்துல் காணி பராதர் அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது துணை தலைவராக மவ்லவி ஹன்னாவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலிபான் அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சராக முல்லா யாகூப், செராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சராக செயல்படுவார்கள் என அறிவிப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan Taliban Govt Announce President and Ministers Team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->