"எனது ஆன்மீக காதலி"... 800 ஆண்டுகள் பழமையான மாமியுடன் வாழ்ந்து வந்த பெரு மனிதன்.!!
A Peru man who lived with an 800 year old Mummy as my spiritual lover
தென் அமெரிக்க நாடான பெருவை சேர்ந்தவர் ஜுலியோ சீசர்(26). இவர் உணவு டெலிவரி செய்து வந்தார். இந்நிலையில் ஜுலியோ சீசர் டெலிவரி பையில் மம்மியை வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து ஜுலியோ சீசரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மம்மியை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து ஜுலியோ சீசரிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மம்மியை தந்தை வீட்டிற்கு எடுத்து வந்ததாகவும், அதனை எனது ஆன்மீக காதலியாக நினைத்து அதனுடன் வசித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் நண்பர்கள் மம்மியை பார்க்க வேண்டும் என்று கூறியதால் அவர்களிடம் காட்டுவதற்கு பையில் எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மம்மியை ஆய்வு செய்வதில், அது 600 முதல் 800 ஆண்டுகள் பழமையானது என்பதும், அது ஒரு ஆண் என்பதும் தெரிய வந்தது. மேலும் தோழியாக நினைத்த அந்த மம்மி ஆண் என தெரிந்ததும் ஜூலியோ சீசர் அதிர்ச்சியடைந்தார்.
English Summary
A Peru man who lived with an 800 year old Mummy as my spiritual lover