ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற தாக்குதல்.! 99 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்த ஆா்மீனியா மற்றும் அஜா்பைஜானுக்கும் இடையே கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற எல்லை தொடர்பான போரில் நாக்ரோனா-கராபாக் மாகாணத்தை அசர்பைஜான் கைப்பற்றியது.

மேலும் நாக்ரோனா-கராபாக் மாகாணத்தில் இரு நாட்டினரும் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட 2000 ரஷ்யா வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருநாட்டினரின் ராணுவ வீரர்களிடையே நடைபெற்ற மோதலில் அஜா்பைஜான் வீரா்கள் 49 பேரும், ஆா்மீனியா வீரர்கள் 50 பேரும் உயிரிழந்துள்ளனர்.

எல்லை தொடர்பான நிலைபாடுகளை மாற்றிக் கொள்ள அஜா்பைஜான் அதிபா் இல்ஹம் அலியேவுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தபின், தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ஆா்மீனிய பிரதமா் நிகோல் பாஷினியன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டினருக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

99 died in conflict between Armenia and azerbaijan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->