ஆஸ்கர் விருதுகள் 2023: சிறந்த துணை நடிகர் விருதை வென்றார் 'கி ஹுங் குயின்'..!! - Seithipunal
Seithipunal


சிறந்த துணை நடிகருக்கான 95வது ஆஸ்கர் விருதை நடிகர் கி ஹுங் குயின் வென்றார்.

ஆஸ்கர் விருது' சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சிறந்த படம், நடிகர், துணை நடிகர், நடிகை உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்டமாக நடைபெறும், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், சிறந்த துணை நடிகருக்கான விருது 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' ( everything everywhere all at once) என்ற படத்திற்காக நடிகர் கி ஹுங் குயின் வென்றார். மேலும் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படத்திற்காக ஜேமி லீ கர்டீஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

95th Oscars Best Supporting male Actor Award Winner Ki Hung Quin


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->