அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 55 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர், வேலைவாய்ப்பின்மை மற்றும் பஞ்சம் ஆகிய காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக மேற்கொள்ளப்படும் பயணங்கள் ஆபத்தில் முடிவடைகின்றன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை லிபியாவின் தலைநகர் திரிபோலியிலிருந்து 80 பயணிகளுடன் புறப்பட்ட படகு சிறிது நேரத்திலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தகவலறிந்து விரைந்த கடலோர காவல் படையினர் கடலில் மூழ்கியவர்களை மீட்டனர்.

இதுதொடர்பாக மீட்பு படையினர் கூறும்பொழுது, இதுவரை இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான், சிரியா, துனிசியா மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

55 refugees killed in boat capsizing in Libya


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->