நைஜீரியாவில் பயங்கர குண்டுவெடிப்பு - 54 பேர் பலி - Seithipunal
Seithipunal


நைஜீரியாவில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் வடமத்திய பகுதியில் நசராவாவிலிருந்து பெனு மாநிலங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்டு செல்லும் பொழுது மேய்ச்சலுக்கு எதிரான சட்டங்களை மீறியதற்காக அதிகாரிகள் விலங்குகளை பறிமுதல் செய்தனர். அப்பொழுது கால்நடைகளை கொண்டு செல்லும் பொழுது குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த குண்டு வெடிப்பில் கால்நடை மேய்ப்பவர்கள் உட்பட 54 பொதுமக்கள் உயிரிழந்தனர். நைஜீரியாவில் மேய்ச்சலுக்கு எதிராக சட்டங்கள் இருந்து வருவதால் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பிற்கு யார் காரணம் என்று இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக நசராலா மாகாண கவர்னர் அப்துல்லாஹி பேசும் பொழுது, இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தினால் ஏற்பட்ட பதட்டத்தை தணிப்பதற்காக பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

54 died in Nigerian bomb blast


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->