ஆஸ்திரேலியா :: இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்.! 5 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி இருந்த இந்தியர்கள் மீது காலிஸ்தான்  ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள், மெல்போர்னில் உள்ள ஹிந்து கோவில்கள் சுவர்களின் மீது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுதி கோவிலின் சுவர்களை சேதப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் காலிஸ்தான் சார்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மெல்போர்னில் உள்ள ஃபெடரேஷன் சதுக்கத்தில் போராட்டம் நடத்தவும், காலிஸ்தான் குழுக்களுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தவும் திட்டமிட்டனர்.

இந்நிலையில் ஃபெடரேஷன் சதுக்கத்தில் தேசிய கொடியை ஏந்தி இந்தியர்கள் நேற்று போராட்டம் நடத்திய பொழுது, அங்கு வந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தாக்குதல் தொடர்பாக பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது ட்விட்டர் பதிவில், காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்திய விரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை சீர்குலைக்க முயற்சிக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 injured as Kalistan supporters attack Indians in Australia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->