துருக்கி நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு நடுவேயும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் 3 நாட்களில் 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து பொதுமக்கள் இடுப்பாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 1.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கியின் தென்கிழக்கு மாகாணங்களில் 3 மாத கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

48 people involved in theft arrested amid earthquake damage in Turkey


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->