கிழக்கு காங்கோ || ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்காவின் கிழக்கு நாடான காங்கோவில் கிளர்ச்சி படைகளுக்கும், அந்நாட்டு படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். மேலும் காங்கோவில் உள்நாட்டு போரை கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா. அமைதிப்படை உள்ளது.

ஆனால் அந்த அமைதிப்படை, தனது கடமையை சரிவரச்செய்வதில்லை மற்றும் கிளர்ச்சிப்படைகள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 3 நாட்களாக நடந்த போராட்டத்தில் மட்டும் ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 3 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் கிழக்கு காங்கோவில் கிவு மாகாணத்தில் கிலோமோனி மாவட்டத்தில் ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் கூட்டத்தைக் கலைக்காமல் இருந்திருந்தால், பலி எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும் என்று உவிரா நகர துணை மேயர் கிகி கிபாரா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 persons electrocuted during protest again UN


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->