சிரியா : கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் - 13 பேர் பலி - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை எதிர்த்து கடந்த 10 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் இட்லிப், அலெப்போ, ரக்கா, டெய்ர் அஸ் ஸோர், ஹஸ்ஸாகே, டெரா மற்றும் குனீட்ரா உள்ளிட்ட மாகாணங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

இதனிடையே ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு ஆதரவாக ரஷ்ய படைகள் கிளர்ச்சியாளர்கள் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 க்கும் மேற்பட்ட இடங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சிரியாவின் அவசரகால குழு வெளியிட்ட தகவலில், இட்லிப் மகானத்தின் ஜிஸ்ர் அல்-ஷுகூர் காய்கறி சந்தையில் இரண்டு ரஷ்ய சு-24 போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இட்லிப் நகரம், பெனின் நகரம் மற்றும் அல்-அர்பீன் மலைப் பகுதிகளை குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 died as russia air force attacks Syrian rebels


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->