இயல்பை விட தமிழக வானிலையில் இந்தாண்டு மாற்றம்.! வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்.! - Seithipunal
Seithipunal


அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் வடகிழக்கு பருவமழை தொடர வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2019-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவான மழை 454 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது .தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட நான்கு சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் இயல்பை விட 65 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 2 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது

பெரம்பலூர் மாவட்டத்தில் இயல்பை விட 28 சதவீதம் மிகக் குறைவான மழை பதிவாகியுள்ளது.  வங்கக் கடல் அரபிக் கடல் பகுதிகளில் இந்த ஆண்டு மொத்தம் எட்டு புயல்கள் உருவாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டின் வங்ககடலில் 3, அரபிக்கடலில் 5, என மொத்தமாக 8 புயல்கள் உருவாகின. 

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this year rain percentage increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->