ரெட் அலர்ட் விடுத்து எச்சரிக்கை செய்த இந்திய வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


அடுத்த இரண்டு தினகளுக்கு டெல்லியில் மிகக் கடுமையான குளிர் நிலவும் என்பதை குறிக்கும் வகையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில்  கடுமையான குளிர் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியிலும் கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்று தட்ப வெப்ப நிலை 2 டிகிரிக்கும் குறைவாக பதிவாகியது. இந்தநிலையில், இன்று காலை லோதி ரோடு பகுதியில் 2 புள்ளி 8 டிகிரி செல்சியாகவும், பாலம் பகுதியில் 3 புள்ளி 2 செல்சியசாகவும், சப்தர்ஜங் பகுதியில் 3 புள்ளி 4 டிகிரி செல்சியசாகவும் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

இன்று காலை பாலம், சப்தர்ஜங்கில் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பனிமூட்டம் நிலவியதன் காரணமாக, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. அதிக பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று விமானங்கள், ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் விமானங்கள், ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

red alert for delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->