கொட்டித்தீர்க்க போகும் கனமழை?! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!  - Seithipunal
Seithipunal


சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தென் தமிழக மாவட்டத்தில் மற்றும் மேற்கு உள் மாவட்டங்கள் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், "தெற்கு உள் கர்நாடக பகுதியிலும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல், தென் தமிழகத்தில் நிலப்பரப்பில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

மேலும், வெப்பச்சலனம் ஏற்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக  மேற்கு உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை இதன்காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகப்படியாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in tamilnadu chennai meteorological center announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->