அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை! வானிலை மையம் தகவல்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகப் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையேஅல்லது இடியுடன் கூடிய  மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next two days for this district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->