உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, இந்த மாவட்டங்களில் இடியுடன் மழை! - Seithipunal
Seithipunal


காற்றின் திசைவேகம் மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு.

சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.

வடக்கு மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 20ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு. தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு, பலத்த காற்று கொள்ள வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new cyclone form im september 20


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->