தமிழகத்தில் இன்று மழை பெய்யப்போகும் மாவட்டங்கள்.! தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

வெயில் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சூறை காற்றுடன் மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. 

இன்று எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளவை.

காற்றுக் குவியல் மேற்கு மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதனால் நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், தேனி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பில்லை.

சென்னை, நாகை, புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை முகமே இல்லாமல் இருக்கிறது.
 
நேற்றை வெப்பநிலை : 

திருத்தணி - 44 C
திருவண்ணாமலை - 43.2 C
வேலூர் - 42.9 C
காஞ்சிபுரம் - 42.6 C
செய்யாறு - 42.5 C
காட்டுப்பாக்கம் - 42 C
சென்னை சிட்டி - 41.3 C


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 10 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->