தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு குளிர்ச்சியான செய்தி.!! என்னன்னு பாருங்க.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் பல்வேறு  பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், முடிந்த அளவுக்கு அதிகப்படியான நீர் பருகுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரு மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Light rain may occur in kanniyakumari thirunelveli


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->