தண்ணீர் இன்றி தவித்து வந்த, சென்னை மக்களின் வயிற்றில் பாலை வார்த்த வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் போதிய மழை இல்லாதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏரிகளான புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், ஆகிய நான்கு ஏரிகள் தான். இவற்றில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் ஏற்கனவே வறண்டு விட்டது.

தண்ணீர் இன்றி தவித்து வந்த சென்னை மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தி வெளியிட்டுள்ளது. வருகின்ற 18ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு சென்னை நகரில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. 

இதன் மூலம் நீர் நிலைகளில் நீர் அதிகரிக்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால் குடிநீர் மற்றும் கழிவு நீருக்கு தேவையான நீர் கிடைக்காததாலும் பள்ளிகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் சில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

june 15 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->