நவம்பரில் பருவமழையால் வெப்பமாக குளிரும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய பகுதி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. வழக்கமாக அக்டோபர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் வரை நீடிக்கும் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நீண்ட கால சராசரியில் (LPA) 77-123% சாதாரண மழையைக் கொண்டுவரும்.

நவம்பர் மாதத்தில் தென்னிந்திய நீண்ட கால சராசரி மழையளவு 118.69 மிமீ ஆகும். அதேவேளையில் நாட்டின் மற்ற பகுதிகளில் நீண்ட கால சராசரி 29.7 மிமீ ஆகும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஒரு நாள் தாமதமாக அக்டோபர் 21 அன்று தொடங்கியது. கடந்த 8 ஆண்டுகளில் 2019ம் ஆண்டு மட்டுமே வடகிழக்கு பருவமழை சரியான நேரத்திற்கு முன்பே தொடங்கியது.

நவம்பரில் வடமேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலையுடன் கூடிய வெப்பமான குளிர்காலம் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதேபோன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைந்தபட்ச வெப்பநிலை இருக்கும்.

பகல் குளிர்ச்சியாகவும் இரவு வெப்பமாகவும் இருக்கும். எல் நினோ நிலைகள் தொடர்வதாகவும், அது வெப்பமான குளிர்காலத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் வறண்ட மற்றும் வெப்பமான மாதங்களில் ஒன்றாகும். இது 1901 முதல் 6வது வறண்ட மாதமாகவும் 3வது வெப்பமான மாதமாகவும் இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Imd predict normal northeast monsoon warmer winter


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->