சென்னையில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை! மழை பொழிவு சராசரியை விட அதிகம்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ் பகுதியில் நேற்று வலுவிழந்ததால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி நகர், வடபழனி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. 

அதேபோன்று சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, போரூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது.

அதன்படி தரமணி 67 மிமீ, செம்பரம்பாக்கம் 88 மிமீ, மேற்கு தாம்பரம் 73 மிமீ, காட்டுப்பாக்கம் 55 மிமீ, நந்தனம் 49 மிமீ, வில்லிவாக்கம் 30 மிமீ, நுங்கம்பாக்கம் 44 மிமீ, மீனம்பாக்கம் 54மிமீ மழை நேற்று ஒரே இரவில் பதிவாகியுள்ளது. இந்த மழையின் அளவு சராசரியை விட அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சென்னையில் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையில் மழையானது அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருவதால் நீர் திறப்பின் அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை முதல் தமிழகத்தில் பரவலாக மழை படிப்படியாக குறைய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain in Chennai overnight Rainfall is above average


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->