வெளுத்து வாங்கிய மழை.. இடி, மின்னல் தாக்கி 83 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தென்மேற்கு பருவமழையானது துவங்கி சில வாரங்கள் கடந்துள்ள நிலையில், மழைப்பொழிவு குறைந்தளவு இருந்து வருகிறது. ஆனால், இந்த வருடத்தின் தென்மேற்கு பருவமழை இன்று முதல் கனமழையை கொடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில், இந்தியாவின் கேரளா, அருணாசல பிரதேசம், மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களில் கனமழை முதல் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதனால் மேற்கூறிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுவதாகவும் அறிவித்துள்ளது.  

மேலும், பீகாரில் நேற்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

83 people die in thunderbolt attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->