நடுரோட்டில் பள்ளி மாணவிகள் இப்படியா செய்வது.?! வைரல் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


இணையத்தில் தற்போது டெல்லி பள்ளி மாணவிகள் சிலர் நடுரோட்டில் சண்டை இடும் காட்சியானது வைரலாகி வருகின்றது.

இணையதளத்தில் பொதுவாக ஆண்கள் நடுரோட்டில் சண்டையிடுவது போன்ற பல்வேறு அதிரடி சண்டைகள் எதிர்பாராத நேரத்தில் நடைபெறும், அப்போது அதனை வீடியோ எடுத்து ட்ரெண்டாக்குவது வழக்கம். அதுபோல தற்சமயம் அதிகப்படியாக பெண்கள் சண்டையிடும் வீடியோக்களும் வெளி வந்த வண்ணம் இருக்கின்றது.

பொதுவாக பள்ளி, கல்லூரி காலங்களில் என்றாலே மாணவ மாணவிகளிடையே பலதரப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது. இந்நிலையில், தற்போது அதிக அளவில் பகையானது வெளிப்படும்போது அது ஆபத்தாக மாறி விடுகின்றது. சமூக வலைத்தளத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. 

அதில், இரு மாணவி குழுக்களிடையே சண்டை நடக்கின்றது. அதில் சில மாணவிகள் அடி உதை என பலமாக தாக்குகின்றனர். சுற்றிலும் இருப்பவர்கள் அதை தடுக்காமல், வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோவானது, வைரலான நிலையில் சமூக ஆர்வலர்கள் பலரும் வன்முறையை தடுக்காமல் இதனை ஆதரிப்பது நல்ல விஷயம் அல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SCHOOL GIRLS FIGHT IN DELHI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->