சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடல் அறிமுகம்.! இவ்வளவுதான் விலையா?! - Seithipunal
Seithipunal


சியோமி நிறுவனம் அதன் புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும். 

விலை விவரங்கள்:

சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடலில் விலை - ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சிறப்பு அம்சங்கள்:

• இதில் 768x1366 பிக்சல் ரெசல்யூஷன் 
டிஸ்ப்ளே மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.

• இதில் பேட்ச்வால் 4 சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி 11, டிடிஎஸ் எக்ஸ், டால்பி ஆடியோ மற்றும் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த புதிய மாடலில் பெசல்கள் இன்றி ஹெச்டி ரெடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

• குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர், 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

• கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்டிஎம்ஐ 2.0 மற்றும் இரண்டு யு.எஸ்.பி போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், ஏவிஐ இன்புட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஈத்தர்நெட் போர்ட், டூயல் பேண்ட் வைபை மற்றும் ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் 24 வாட் ஆடியோ அவுட்புட் வழங்கும் இரண்டு ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த புதிய டிவி மாடலில் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் எக்ஸ் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 

• ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனத்தில் இருந்து ஸ்கிரீன் காஸ்ட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

• கூகுள் அசிஸ்டண்ட் சேவைக்கு ஹேண்ட்ஸ் பிரீ அக்சஸ், ரிமோட் கண்ட்ரோல் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. 

• இதன் மூலம் ஏராளமான செயலிகளை பயனர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

• இந்த டிவி பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. மேலும் அமேசான், ப்ளிப்கார்ட், Mi மற்றும் Mi ஹோம் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

• தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு தள்ளுபடி மற்றும் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Xiaomi Smart TV 5A Pro 32 inch model introduced


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->