சூடான பானங்களை கப்பில் ஊற்றும் போது, கப் உடைந்து போவது... ஏன்? வியக்கவைக்கும் காரணம்.!  - Seithipunal
Seithipunal


கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பையில் சூடான பானங்களை ஊற்றுகின்ற பொழுது சூட்டினால் கப் சில நேரங்களில் உடைந்து போவதுண்டு இதற்கு என்ன காரணமென்று காண்போம். 

வெப்பத்தால் சில பொருட்கள் விரிவடையும். இப்படி கண்ணாடி கோப்பையில் சூடான பானங்களை ஊற்றும் பொழுது, முதலில் கோப்பையின் உட்பகுதி வெப்பத்தால் விரிவடைகின்றது.

வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக பரவி சற்று தாமதமாக வெளிப்பகுதி விரிவடைகின்றது. ஒருவேளை வழக்கத்திற்கு அதிகமாக சூடு இருந்தால் உட்பரப்பு முதலில் விரிவடைந்து விடும், ஆனால், வெளிப்பரப்பு விரிவடைய நேரமாகும் இதனால் தான் கோப்பை உடைந்து விடுகின்றது.

ஒரு நாளுக்கு இத்தனை முறைதான் காபி குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தால்  இது நடந்துவிடும்!! - Seithipunal

ஒருவேளை எவர்சில்வர் கரண்டியை கப்பில் வைத்துக்கொண்டு, பின் சூடான பானத்தை ஊற்றும் பட்சத்தில் கப் உடைகின்ற வாய்ப்பு குறைவு. ஏனென்றால் பெரும்பான்மையான உலோகங்கள், கண்ணாடி அல்லது பீங்கானை விடவும் வெப்பத்தை அதிகமாகக் கடத்தும் தன்மை கொண்டவை. 
 
ஒரு வெள்ளிக் கரண்டி அல்லது எவர்சில்வரை கோப்பைக்குள் வைத்துவிட்டு பின் சூடான பானத்தை ஊற்றும் பொழுது அந்தக் கரண்டி பெரியளவு வெப்பத்தை கிரகித்துக் கொள்கின்றது. எனவே, கப் சூடாவதும் விரிவடைவதும் குறையும். எனவே, கப் உடைகின்ற வாய்ப்பு கணிசமாக குறைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why cup broken for using hot drinks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->