அசத்தலான அப்-டேட்டுடன் சாம்சங் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன்.! - Seithipunal
Seithipunal


சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் அந்நிறுவனம் கடந்தாண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகப்படுத்திய கேலக்ஸி A03 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LDC பேனல் மற்றும் இன்பினிட்டி வி நாட்ச் வழங்கப்பட்டுள்ளது. 

• இதில் HD+ ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

• புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் என டூயல் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1 மூலம் இயங்குகிறது. 

• மேலும், ஆக்டா கோர் எக்சைனோஸ் 850 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

• இத்துடன் 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி உள்ளிட்ட ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

• இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

• இதில், கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் சப்போர்ட், 4ஜி வோல்ட்இ, வைபை மற்றும் ப்ளூடூத் 5 வழங்கப்பட்டுள்ளது.

• இதனுடன் ஜிபிஎஸ், யுஎஸ்பி சி போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது. 

• புதிய சாம்சங் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன் பிளாக், வைட், கிரீன் மற்றும் காப்பர் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samsung Galaxy A04 smartphone price details


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->