ஹானர் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் - முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


ஹானர் நிறுவனம், அதன் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை தொடர்ந்து, அந்நிறுவனம் தற்போது இதற்கான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X ‌என பெயரிடப்பட்டுள்ளது.

இது ஹானர் பிராண்டின் எண்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆகும். இதன் வெளியீடு விவரங்கள் மட்டுமின்றி இந்த இயர்பட்ஸ் அம்சங்கள் பற்றிய விவரங்களும் டீசரில் இடம்பெற்றுள்ளது. 

இந்த புதிய ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X மாடல் சர்வதேச சந்தையில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இதில், 12 எம்எம் டிரைவர்கள் மற்றும் அதிகபட்சம் 28 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்கப்பட்டுள்ளது 

• மேலும், 12 எம்எம் பயோ-டயபிராம் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது.

•  இதில் குறைந்த எடை செம்பு முலாம் பூசப்பட்ட அலுமினியம் அர்மேச்சர் வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் ப்ளூடூத் 5.2, ஏஏசி மற்றும் எஸ்பிசி கோடெக், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

• இந்த இயர்பட்ஸ் மாடலில் 13 டிகிரி வளைந்த டிசைன் மற்றும் நேச்சுரல் பிட் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த இயர்பட்ஸ் ஒன்றின் எடை 4.3 கிராம் ஆகும். 

• இந்த இயர்போனில் டச் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

• மேலும், டூயல்-மைக் நாய்ஸ் ரிடக்‌ஷன் வசதி மற்றும் 28 மணி நேரத்திற்கான பேட்டரி லைப் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த மாடலில் உள்ள கேமிங் மோட் 125 மில்லி செகண்ட் வரையிலான லோ லேடன்சி வழங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Honor True Wireless Earbuds Details


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->