கோடிகளை கொடுத்து ட்விட்டரை வாங்கிக்கொண்டு அதற்கு RIP போஸ்ட் போட்ட எலான் மஸ்க்.!   - Seithipunal
Seithipunal


பிரபல பணக்காரர் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கினார். இதை தொடர்ந்து, அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் வேலை செய்த முக்கிய அதிகாரிகளை ஒற்றை அறிவிப்பில் நீக்கினார். 

தொடர்ந்து பல்வேறு வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு அதிகாரப்பூர்வ கணக்குக்கான நீல நிற டிக்கிற்கு ஒவ்வொரு மாதமும் 8 டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் ஏதாவது புகார் அளிக்க வேண்டும் என்றால் அதற்கும் எட்டு டாலர் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். எலான் மஸ்கின் இந்த அதிரடி நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், தற்போது தானாகவே நிறுவனத்தில் இருந்து விலகி வேறு வேலைக்கு சென்று வருகின்றனர்.

ஊழியர்கள் இப்படி அனைவரும் ட்விட்டரில் இருந்து வெளியேறினால் விரைவில் மூடுவிழா நடத்த வேண்டியதுதான் என்று சமூக வலைதளங்களில் RIP என்ற ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த ட்ரெண்டிங்கில் ஐக்கியமான எலான் மாஸ் தனது பங்கிற்கு RIP என்று ட்விட்டருக்கு மீம் போட்டுள்ளார். லட்சம் கோடிகளை கொடுத்து ட்விட்டரை வாங்கி வைத்துக்கொண்டு எலான் மஸ்க் விளையாடிக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elan musk RIP post to twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->