விக்ரம் லேண்டருக்கு பிறகு அடுத்த லேண்டாரை அனுப்ப தேதி குறித்த இஸ்ரோ.!  - Seithipunal
Seithipunal


நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ அனுப்பியது. இதனைதொடர்ந்து சந்திராயன்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

நிலவிற்கு சந்திரயான்-I என்ற விண்கலத்தை 2008ஆம் ஆண்டு இஸ்ரோ அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. ஒருவருடம் நிலவை ஆய்வு செய்த சந்திரயான்-I விண்கலத்தின் ஆயுட்காலம் 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்து.

இதையடுத்து, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ அனுப்பியது. ஆனால், நிலவில் இருந்து 2.1 கிமீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து நல்ல முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகின்றது. 
 
இந்நிலையில், சந்திராயன் 3 திட்டம் தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, சந்திரயான்-3 மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandrayaan 3 launching date announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->