ஆப்பிள் நிறுவனத்தின் நான்காவது தலைமுறை ஐபோன் SE மாடல் - வெளியான அசத்தல் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் நிறுவனத்தின் நான்காவது தலைமுறை ஐபோன் SE மாடல் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. முந்தைய 2022 ஐபோன் SE தோற்றத்தில் ஐபோன் 8 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. 

புதிய ஐபோன் SE மாடலில் நாட்ச் வைத்த டிஸ்ப்ளே, சிறிய பெசல்கள், பேஸ் ஐடி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் தோற்றத்தில் ஐபோன் XR போன்றே காட்சியளிக்கிறது.  

இது தவிர மற்ற அம்சங்கள் அனைத்தும் ஐபோன் XR மாடலை போன்றே இருக்கும் என தெரிகிறது. மேலும், ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ் மாடல்கள் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ஆப்பிள் ஏ16 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் XR மாடலில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா IPS LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்தது.

இத்துடன், ஏ12 பயோனிக் பிராசஸர், 3 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 2942 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருந்தது. மேலும், 7MP செல்பி கேமரா, OIS வசதி கொண்ட 12MP பிரைமரி கேமராவும் வழங்கப்பட்டிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apple phone update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->