ஆப்பிள் நிறுவனத்தின் நான்கு புதிய ஐபோன் மாடல்கள்: விரைவில் அறிமுகம்! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் முன்புற டிஸ்ப்ளேவில் மாத்திரை வடிவ கட்-அவுட் வழங்கப்படுகிறது. இதில் செல்பி கேமரா மற்றும் பேஸ் ஐடி பொருத்தப்படுகிறது. மேலும், இந்த புதிய ஐபோனில் உள்ள இரு பன்ச் ஹோல்கள் இடையில் உள்ள இடைவெளியை பயனர்கள் அடையாளம் காணும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில், ஐபோன் 14 ப்ரோ மாடலில் உள்ள மாத்திரை வடிவ கட்-அவுட் செல்பி கேமராவுடன் இணைந்து ஒற்றை கட்-அவுட் போன்று மாறுகிறது. இதனை பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.

மேலும், இதன் நாட்ச் பகுதியில் உள்ள காலி இடத்தில் பிரைவசி நோட்டிபிகேஷன்கள் வழங்குகிறது. வரும் 7-ம் தேதி நடைபெற உள்ள பார் அவுட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ்/மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் மேம்பட்ட ஏ16 பயோனிக் பிராசஸர்கள் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, ஐபோன் 14 மாடலில் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட உள்ளது. மேலும், ப்ரோ மாடல்களில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் வழங்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apple four new iPhone models introduced soon


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->