ஆதாரம் இல்லாமல் கருத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


நீதிபதிகள் மீது ஆதாரம் இல்லாத கருத்துகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில், பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் முறனற்ற கருத்து வெளியிட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி விசாரணை செய்த போது, எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இழிவான கருத்துகள் மற்றும் நேர்காணல்களை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டனர். 

இணையதள குற்றங்களை கண்காணிப்பதற்கு  சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும். மேலும், நீதிபதிகள் மற்றும் அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள் மீது ஆதாரம் இல்லாத கருத்துகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை. 

குறைவான விளம்பரத்துக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதுமட்டுமல்லாமல், சமூக ஒழுக்கம் மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்க நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 2-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youtube channels publish on not proof vedio chennai high court order


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->