கோவை : கோவில் திருவிழாவில் மைக்கில் பேசிய இளைஞர் - நொடியில் நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கோவில் திருவிழாவில் மைக்கில் பேசிய இளைஞர் - நொடியில் நேர்ந்த கொடூரம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் சி.எம்.சி.காலனி பகுதியில் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கடந்த ஒரு வாரமாக ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இந்த விழாவின் ஒரு பகுதியாக அன்னாதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்ப்போது அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்ற இளைஞர் ஒலிப்பெருக்கி மூலம் அன்னதானம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்ட மின் கசிவினால், ஒலிப்பெருக்கியில் அதிகப்படியான மின்சாரம் பாய்ந்து மகேந்திரன் கோவில்வளாகத்திலேயே மயக்கடைந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மகேந்திரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலே மகேந்திரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவ ம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ஒருவர் கோவில் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth died kovil festival for electric shock attack in coimbatore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->