செங்கல்பட்டு: சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் டாஸ்மாக் கடை அருகே, சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அங்கு திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

இதையடுத்து அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன்(23) என்பதும், அவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடமிருந்த 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஹரிஹரன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man arrested for liquor selling in Chengalpattu


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->