மகளிருக்கான இலவச பேருந்துகள் முழு பிங்க் நிறத்தில் இயக்கப்படும்.. போக்குவரத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்

அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். 

ஆனால் சில பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பஸ்களை 'பிங்க்' நிறத்தில் மாற்றியுள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்துகளை அடையாளம் காணும் விதமாக அரசுப் பேருந்துகளின் முன்புறம் மட்டும் பிங்க் நிறம் பூசப்பட்டது.

 இது சமூக வலைதளங்களில் கடும் கிண்டலுக்கு ஆளான நிலையில், தற்போது இலவச பேருந்துகளை முழு பிங்க் நிறமாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பெண்களுக்கான இலவச பேருந்துகள் அனைத்தும் முழு பிங்க் நிறத்தில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens free bus fully pink painted


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->