பெண்கள் தலைமையில் உறுப்பினர் பிரிவு - விஜய் போட்ட பக்கா பிளான்.! - Seithipunal
Seithipunal


சென்னை பனையூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உள்கட்சி கட்டமைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சி தலைவரின் ஆலோசனையின் படி, மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்படும்; 

தமிழக வெற்றிக் கழகத்தின் அடிமட்ட உள்கட்டமைப்பை வலுப்படுத்த மாவட்ட வாரியாகவும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும், உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுப்பதற்காக பிரத்தியேகமான பெண்கள் தலைமையிலான உறுப்பினர் பிரிவை கட்சியின் தலைவர் விரைவில் அறிவிப்பார்.

புதிய உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக பெண்கள் தலைமையிலான உறுப்பினர் பிரிவுடன் இணைந்து செயல்பட, தமிழகத்தில் கட்சியின் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள். 

விரைவில் கிடைக்கும் அதிநவீன மொபைல் செயலியின் உதவியுடன், கட்சியின் உறுப்பினர் பிரிவுடன் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் மாவட்டம், மாநகராட்சி, நகராட்சி, தொகுதி, உள்ளிட்ட இடங்களில் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் டவுன் பஞ்சாயத்து, கிராம அலகு மற்றும் வார்டு நிலைகள். முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் உட்பட பொது மக்கள் எங்கள் கட்சியின் தீவிர உறுப்பினர்களாக மாறுவதை உறுதி செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women led membership tvk leader vijay info


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->