3 மாதத்தில் பிரிந்த காதல் கணவன் - வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


3 மாதத்தில் பிரிந்த காதல் கணவன் - வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்.!

திருப்பத்தூர் மாவட்டம் பா. முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் திருப்பதி - நீலாம்பரி தம்பதியினர். காதலர்களான இவர்கள் இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து காதல் தம்பதியினர் இருவரும் பெண்ணின் வீட்டிலேயே கடந்த 2 மாதங்களாக வசித்து வந்தனர். இந்த நிலையில், திருப்பதி தனது வீட்டிற்கு சென்று, பெற்றோர்களிடம் பேசிவிட்டு வந்து அழைத்துச் செல்வதாக கூறி ஒரு மாதத்திற்கு முன்பு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் தலைமறைவாகி உள்ளார்.

இதைத்தொடர்ந்து, நீலாம்பரி திருப்பதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, தனக்கு 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 30 பவுன் நகை மற்றும் திருப்பத்தூரில் சொகுசு வீடு வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாக உள்ளது. அதையேதான் நானும் கேட்கிறேன். 

இல்லையென்றால் சேர்ந்து வாழ முடியாது என்றுக் கூறிவிட்டு நீலாம்பரியின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார். இது தொடர்பாக நீலாம்பரி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் திடீரென நீலாம்பரி, திருப்பதியின் வீட்டின் முன்பு தனது கணவருடன் சேர்த்து வைக்கும்படியும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் திருப்பதியின் தாயார் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman protest front of husband home in tirupathur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->