தாய்ப்பால் தர முடியாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை..! 40 நாட்களில் தாயை இழந்த ஆண் குழந்தை..!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ஆஷா. இவருக்கும் அமின் பாஷா என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆன நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மகப்பேறுகாக பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். ஆஷாவுக்கு 40 நாட்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆஷாவும் அவருடைய குழந்தையும் கொடுங்கையூரில் உள்ள அம்மா வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று மதியம் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென சத்தம் கேட்டு ஆயிஷாவின் அம்மா அஸ்மத் பீவி எழுந்து பார்த்துள்ளார். அப்பொழுது ஆஷா இல்லாததை அடுத்து அவரை தேடிச் சென்றுள்ளார். அப்பொழுது சமையல் அறையில் உள்ள இரும்பு கம்பியில் புடவையால் ஆஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

அஸ்மத் பீவியின் அலறல் குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆஷாவின் உடலை மீட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆஷா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆன நிலையில் சரிவர பால் கொடுக்க முடியாத காரணத்தால் ஆஷா மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஆஷா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் இச்சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள் : 

மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104

சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050 

உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman commits suicide due to inability to breastfeed baby


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->