போலீஸ் ஸ்டேஷன் வாசலில் 'டும் டும் டும்'! அதிர்ச்சியில் உறைந்த இரண்டு குடும்பத்தார்!? - Seithipunal
Seithipunal


திருச்சி கண்ட்ரோல்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் இரு குடும்பத்தினர் சண்டையிட்டு கொண்டிருக்க இளைஞர் ஒருவர் இளம் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

 திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சார்ந்தவர்  அர்ஜுன் இவர் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரும் திருச்சி கே கே நகர் பகுதியைச் சார்ந்த  ஆசிரியர் பயிற்சி நிறுவனமானவியான சிவரஞ்சனி என்பவரும்  காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் சம்பவம் இரு வீட்டுக்கும் தெரிந்ததால் பிரச்சனையாக இருக்கிறது. இருதரப்பினரும் இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக இரு தரப்பினரையும் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருந்தது. அப்போது வேறு ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரித்துக் கொண்டிருந்ததால் இவர்களை வெளியிலும் வருமாறு கூறியுள்ளனர். வெளியில் அமர்ந்து இரு குடும்பத்தினரும் சண்டையிட்டு கொண்டிருந்தபோது காதலன் அர்ஜுன் தனது காதலி சிவரஞ்சினியை அழைத்து  தான் வைத்திருந்த மஞ்சள் தாலியை அவரது கழுத்தில் கட்டினார். இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு அவர் சிவரஞ்சனியை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் உள்ளே சென்று விட்டார்.

இது தொடர்பாக சிவரஞ்சினியின் குடும்பத்தார்  எங்களுக்கு இனி சிவரஞ்சனி தேவையில்லை என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து  அவர்கள் கூறியதை பேப்பரில் எழுதிக் கொடுத்து விட்டு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். அவர்களும் எழுதிக் கொடுத்து விட்டு சென்று விட்டனர். பின்னர் அர்ஜுன் குடும்பத்தார் சிவரஞ்சனி நாங்கள் அடைத்துக் கொண்டு செல்கிறோம் என எழுதி கொடுத்துவிட்டு அவர்களும் சென்றனர். காவல் நிலையம் வாசலில் இரு குடும்பத்தார் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது காதலன் தன் காதலிக்கு தாலி கட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

When two families were fighting the boyfriend ties knot to his girlfriend at the door of the police station


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->